ஹாரி புரூக்
ஹாரி புரூக்படம்: ஏபி

தில்லி கேபிடல்ஸ்: ஹாரி புரூக்கிற்குப் பதிலாக ஆப்கன் வீரர்!

தில்லி கேபிடல்ஸ் அணியில் ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரர் ஒப்பந்தமானார்.
Published on

தில்லி கேபிடல்ஸ் அணியில் ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரர் ஒப்பந்தமானார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி புரூக் தில்லி கேபிடல்ஸ் அணியில் ஏலத்தில் தேர்வானார். பின்னர் ஐபிஎல் தொடங்கும் முன்பு தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுமாதிரியான காரணத்தினால் ஒருவர் வெளியேறினால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுமென சமீபத்தில் பிசிசிஐ கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தடையை ஹாரி புரூக் ஏற்றுக்கொண்டு, “எனக்கு இங்கிலாந்து அணிதான் முக்கியம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலாக 23 வயதான ஆப்கன் பேட்டர் சேதிக்குல்லாஹ் அடல் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார்.

49 டி20 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 1,507 ரன்கள் எடுத்துள்ளார். அதிவேகமாக சதம் அடிக்கும் திறமையுள்ளவர்.

புள்ளிப் பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருக்கும் தில்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப்-க்கு செல்ல முக்கியமான போட்டிகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

இன்றிரவு பஞ்சாபுக்கு எதிராக தர்மசாலாவில் மோதவிருக்கிறது. இது இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என முக்கியமான போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com