ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ

போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைப்பதாக அறிவிப்பு.
ஐபிஎல் போஸ்டர்.
ஐபிஎல் போஸ்டர்.
Updated on
1 min read

போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே.25ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

பிசிசிஐ இது குறித்து கூறியதாவது:

ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவைக்கிறோம். இந்த முடிவினை ஐபிஎல் போட்டிகளை நிர்வகிக்கும் குழுவினர் எடுத்துள்ளனர்.

அனைத்து அணிகளின் பிரதிநிதிகள், வீரர்களின் நிலைமை, ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்களின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிசிசிஐ இந்திய ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.

இந்தச் சவாலான காலக்கட்டத்தில் பிசிசிஐ நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறது. இந்திய அரசாங்கம், ராணுவத்துடன் துணை நிற்கிறோம்.

ஆபரேஷன் சிந்தூரில் நாயகர்களாக இருக்கும் ராணுவத்தின் தைரியம், சுயநலமற்ற சேவைக்கு சல்யூட் எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com