
குஜராத் டைட்டன்ஸ் அணியில் பட்லருக்கு மாற்றாக குசால் மெண்டிஸ் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் இந்தியா -பாகிஸ்தான் மோதலால் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள்.
மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே.17ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
ஐபிஎல் போட்டிகள் தேதி மாற்றப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களுக்கு ஏற்கனவே இருக்கும் போட்டிகளை இழக்க வேண்டி இருக்கும்.
இதன் காரணமாக பிசிசிஐ ஐபிஎல் அணிகளுக்கு யாரை வேண்டுமானாலும் மீதமுள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யலாம் எனப் புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது.
இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் - பேட்டர் குசால் மெண்டிஸ் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 11 போட்டிகளில் 500 ரன்கள் குவித்திருந்தார்.
குஜ்ராத் அணியில் டாப் 3 வீரர்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் மூவருமே 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
தற்போது, பட்லர் இல்லாமல் இந்த வெற்றிக் கூட்டணி மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.