
தில்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல்ஸ் ஸ்டார்க் ஐபிஎல் போட்டிகளில் இந்த சீசனில் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
35 வயதாகும் மிட்செல் ஸ்டார்க் இந்த சீசனில் தில்லி அணிக்காக 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்த சீசனில் டெத் ஓவரில் சிறப்பாக வீசிய ஸ்டார்க் தில்லி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
நாளை (மே.17) முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெற இருக்கும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கான போட்டிகளில் விளையாட இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியன் அசோசியேட் பிரஸ் ஊடகம் தெரிவித்த செய்தியில் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள போவதில்லை எனக் கூறியுள்ளார்.
இந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியதும் கவனிக்கத்தக்கது.
ஸ்டார்க் இல்லாதது தில்லி அணிக்கு மிகவும் பலவீனமாகவே இருக்கும் என்பதால் பிரேசர் மெக்கர்குப் பதிலாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை மாற்று வீரராகவும் எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.