ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும்: நானும் உடனிருப்பேன் -ஏபி டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கோப்பையை கோலியுடன் கைகோர்த்து தூக்குவேன்: ஏபி டி வில்லியர்ஸ்
ஏபி டி வில்லியர்ஸ் -  விராட் கோலி
ஏபி டி வில்லியர்ஸ் - விராட் கோலி
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கோப்பையை விராட் கோலியுடன் கைகோர்த்து தூக்குவேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானுடனான தீவிர போர்ப் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்றிரவிலிருந்து(மே 17) மீண்டும் நடைபெறுகின்றன. புதிய அட்டவணைப்படி போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் களம் காணுகின்றன. புள்ளிகள் பட்டியலில் 2-ஆம் இடத்திலிருக்கும் பெங்களூரு, இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் கட்டத்துக்குத் தகுதிபெற்றுவிடும். மறுபுறம், கொல்கத்தா தோற்கும் நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.

இந்தநிலையில், ‘இறுதிப்போட்டியன்று விராட் கோலியுடன் நானும் கை கோர்த்துக்கொண்டு ஐபிஎல் கோப்பையை உச்சி நுகருவேன்’ என்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அவர் பேசியிருப்பதாவது: “ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால், அந்த அணி வீரர்களுடன் நானும் விளையாட்டுத் திடலில் இருப்பேன்.

விராட் உடன் இணைந்து கோப்பையை தூக்குவதைவிட இன்பமளிக்கும் ஒரு விஷயம் எனக்கு வேறெதுவும் இல்லை. நாங்கள்(விராட் கோலி, டிவில்லியர்ஸ்) கோப்பையை வெல்ல பல ஆண்டுகள் முயற்சித்தோம்” என்று பேசியுள்ளார் டி வில்லியர்ஸ்.

ஐபிஎல் தொடரில் கடந்த பல சீசன்களாக ஆர்சிபி அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ், கோலி மீது தனி மரியாதையும் அன்பும் கொண்டவர். அவர் அந்த அணியிலிருந்தபோது ஐபிஎல் கோப்பை வெல்வது கனவாக மட்டுமே கலைந்து போனதென்னவோ உண்மைதான். ஆனால், இந்த சீசனில் ஆர்சிபி கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகம் என்பதே கோலி சார்ந்துள்ள அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com