2 சீசனிலும் 10 தோல்விகள்: ஆர்சிபி, மும்பைக்கு அடுத்து சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றின் மோசமான சாதனைகள் பட்டியலில் சிஎஸ்கே அணி நுழைந்தது குறித்து...
சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணிபடம்: எக்ஸ் / சிஎஸ்கே
Published on
Updated on
1 min read

ஐபிஎல் வரலாற்றின் மோசமான சாதனைகள் பட்டியலில் சிஎஸ்கே அணியும் இடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே தற்போது மோசமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட சிசன்களில் 10 போட்டிகளில் தோல்வியுற்ற அணிகள் பட்டியலில் சிஎஸ்கே அணியும் இணைந்துள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா தாக்குதலைத் தொடர்ந்து 18-ஆவது ஐபிஎல் சீசனில் போட்டிகள் ஒரு வாரம் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு ராஜஸ்தானுடன் சிஎஸ்கே அணி தோல்வியுற்றதன் மூலம் ஒரே சீசனில் 10 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதற்கு முன்பாக சிஎஸ்கே 2022-இல் 10 போட்டிகளில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா (2013), ராஜஸ்தான் (2025) அணிகள் முறையே ஒரு முறை 10 போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளன.

சிஎஸ்கே அணிக்கு குஜராத் அணியுடன் வரும் மே.25ஆம் தேதி இந்த சீசனில் கடைசி போட்டி இருக்கிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட சீசன்களில் 10க்கும் அதிகமான போட்டிகளில் தோல்வியுற்ற அணிகள்

1. பஞ்சாப் கிங்ஸ் - 11 தோல்விகள் (2015), 10 தோல்விகள் (2010, 2016)

2. தில்லி கேபிடல்ஸ் - 13 தோல்விகள் (2013), 12 தோல்விகள் (2014)

3. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 10 தோல்விகள் (2021, 2023)

4. ஆர்சிபி - 10 தோல்விகள் (2008, 2017)

5. மும்பை இந்தியன்ஸ் - 10 தோல்விகள் (2022, 2024)

6. சிஎஸ்கே - 10 தோல்விகள் (2022, 2025)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com