தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

படம் | AP

Published On :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.

பந்துவீச்சில் அசத்தல்; 101 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.1 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஜோஷ் இங்லிஷ் (4 ரன்கள்), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்கள்), நேஹல் வதேரா (8 ரன்கள்), ஷஷாங் சிங் (3 ரன்கள்), முஷீர் கான் (0 ரன்), ஹர்பிரித் பிரார் (4 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

நிதானமாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். யஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆர்பிசி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.