Enable Javscript for better performance
இவன் இருக்குறவரை நாம தோக்கமாட்டோம்னு நம்பிக்கைய ஏற்படுத்தி அதுலயும் ஜெயிக்கிறான் பாரு...: தோனியைக் க- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  இவன் இருக்குறவரை நாம தோக்கமாட்டோம்னு நம்பிக்கைய ஏற்படுத்தி அதுலயும் ஜெயிக்கிறான் பாரு...: தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்!

  By எழில்  |   Published On : 01st April 2019 02:36 PM  |   Last Updated : 01st April 2019 02:54 PM  |  அ+அ அ-  |  

  dhoni_bravo123

   

  சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சென்னை அணி 175 ரன்களை குவித்தது. தோனி 46 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் 8 அணிகளும் 3 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி மட்டுமே ஒரு தோல்வியும் அடையாமல் உள்ளது.

  சிஎஸ்கேவின் வெற்றியை அடுத்து, சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் தோனியைக் கொண்டாடி வருகிறார்கள். தோனியின் தலைமைப் பண்பினால் தான் சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று அனைவருமே வெற்றிக் காரணமாக தோனியைக் குறிப்பிடுகிறார்கள். அதன் தொகுப்பு:

  @vineshkraja: ரீட்டையர்ட் ஆகுற டைம்ல சும்மா சொல்லி அடிக்குறது ரெண்டே பேர்தான்.. தலைவர்... தல தோனி..

  @Sathish_Twiitz: 18 வது ஓவர்ல ரன்ன வாரி வழங்குன பிராவோ ஓவர் 20 வது ஓவர்ல 12 ரன் அடிக்க முடியாம போனதுக்கு முக்கிய காரணம் #தோனி! ஒரு ஓவர்ல பேட்ஸ்மேன் எப்படி அடிக்கிறானு கணிச்சிட்டாரு #CSKvRR @ChennaiIPL

  @RavindharKalyan: எழுதி வெச்சிக்கோடா... தோனி ரிட்டையர்ட் ஆகி குறைஞ்சது 2 வருஷமாவது அவரோட இடத்த சரிக்கட்ட ஆள் இல்லாம கண்டிப்பா இந்தியா கஷ்டப்படும்... Finisher, WKக்கு alternate தேடறப்ப தான்டா தலைவனோட அருமை உங்களுக்கெல்லாம் புரியும் 

  @am_jhony: விளையாட்ல ஜெயிக்கிறது தோக்கிறது சாதாரண விஷயம் தான். ஆனா இவன் இருக்குறவரை நாம தோக்கமாட்டோம்னு எல்லாருக்கும் நம்பிக்கைய ஏற்படுத்தி அதுலயும் ஜெயிக்கிறான்பாரு. 
  தோனி ஒரு யுகத்திற்கான தலைவன்.

  @RitVidu: கடைசி வரைக்கும் இவன் தோக்க மாட்டான்னு கோடிப் பேர்களை நம்ப வச்சவன நீங்க எப்டி கூப்பிடுவீங்க?நாங்க தலைவன்னு கூப்பிடுவோம் 

  @satheeshG2018: முந்தைய ஓவரில் 19 ரன் கொடுத்தும் ,நீ வா பிராவோ கடைசி ஓவர போடுன்னு கொடுத்தான் பாரு.....அங்க நிக்கிறான் தலைவன் தோனி

  @MikkhailVaswani: Make no mistake, #Dhoni is not rolling back the years, this is not vintage Dhoni ... This is Dhoni of the present !! For those who don't value reputation & class and go by current form , Dhoni lived the moment in true #Thala style

  @bhogleharsha: In my profession, in live television, I have learnt that there is always more time than you think there is. MS Dhoni shows that everyday on a cricket field. The power of a calm mind!

  @GSV1980: Exceptional knock by @msdhoni ...which brings me to the big question. Why is Dhoni in yellow not as attacking as the Dhoni in blue? I have an answer too...because he gets better support  from his @ChennaiIPL team mates in the batting card.

  @irbishi: M S Dhoni has got to be the coolest leader to have walked onto ancrixket field. I hope all the young kids around the world copy MSD’s body language, demeanor and calmness. 

  @bhaleraosarang: God surely must be MS Dhoni fan.
  Was extremely fortunate not to get out bowled when on duck.
  After that MSD was the boss. 60 runs in the final three.
  His tactical astuteness came to the fore when he plot Samson’s dismissal.
  MSD is a supercomputer


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp