நூறு சதவீத வெற்றி: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறிய சென்னை அணி!
By எழில் | Published On : 01st April 2019 10:33 AM | Last Updated : 01st April 2019 10:41 AM | அ+அ அ- |

சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சென்னை அணி 175 ரன்களை குவித்தது. தோனி 46 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.
இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் 8 அணிகளும் 3 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி மட்டுமே ஒரு தோல்வியும் அடையாமல் உள்ளது. கடைசி இடத்தில் விராட் கோலியின் பெங்களூர் அணி உள்ளது.
புள்ளிகள் பட்டியல்
அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
சென்னை | 3 | 3 | 0 | 6 | +0.507 |
ஹைதராபாத் | 3 | 2 | 1 | 4 | +2.111 |
கொல்கத்தா | 3 | 2 | 1 | 4 | +0.555 |
தில்லி | 3 | 2 | 1 | 4 | +0.519 |
பஞ்சாப் | 3 | 2 | 1 | 4 | -0.008 |
மும்பை | 3 | 1 | 2 | 2 | -0.750 |
ராஜஸ்தான் | 3 | 0 | 3 | 0 | -0.575 |
பெங்களூர் | 3 | 0 | 3 | 0 | -2.413 |