'அது ஒரு தொடர்கதை'- முதல் போட்டியிலேயே மண்ணைக் கவ்வும் ஆர்சிபி 

ஒவ்வொரு ஜபிஎல் சீசன் தொடக்கப் போட்டியிலும் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெருத்த ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
'அது ஒரு தொடர்கதை'- முதல் போட்டியிலேயே மண்ணைக் கவ்வும் ஆர்சிபி 

ஒவ்வொரு ஜபிஎல் சீசன் தொடக்கப் போட்டியிலும் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெருத்த ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

பெங்களூருவை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அணி ராயல் சேலஞ்சர்ஸ். பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அணியில் அதிரடி வீரர்களுக்கும் திறமையான பேட்ஸ்மேன்களுக்கும் பஞ்சமில்லை. ராகுல் டிராவிட், கலீஸ், கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி என நட்சத்திர வீரர்கள் நிறைந்த அணியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு இந்த அணிக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட அணியாகவும் ஆர்சிபி இருந்து வருகிறது.

சாதனைகளால் பாராட்டு இல்லாவிட்டாலும், ஆர்சிபி-க்கு சோதனைகள் சற்று அதிகம் தான். குறிப்பாக ஒரு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் இதுவரை 3 முறை களமிறங்கிய ஆர்சிபி, ஒரு போட்டியில் கூட வென்றதில்லை எனும் விசித்திர சோதனையை விதிவசத்தால் தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த 3 சம்பவங்களையும் தொடர்ந்து காண்போம்:

2008-ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 140 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முதல் ஐபிஎல் சீசனின் முதல் போட்டியான இதில் பிரண்டன் மெக்கல்லம் ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டத்தை ஐபிஎல் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

2017-ஆம் ஆண்டு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அந்த சீசனின் முதல் போட்டியில் விளையாடிய ஆர்சிபி 35 ரன்களில் தோல்வியை தழுவியது.

தற்போது நடப்பாண்டில் (2019) 12-ஆவது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் வெறும் 70 ரன்களுக்கு சுருண்டு, 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com