இதுதான் கடைசி எச்சரிக்கை: மன்கட் சர்ச்சை பற்றி அஸ்வின் விளக்கம்

இதுதான் இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை...
இதுதான் கடைசி எச்சரிக்கை: மன்கட் சர்ச்சை பற்றி அஸ்வின் விளக்கம்

ஆர்சிபி வீரர் ஆரோன் ஃபிஞ்சை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யாதது பற்றி தில்லி வீரர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது.

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது தில்லி அணி. அதேபோல தோல்வி காரணமாக பெங்களூர் அணி 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

பெங்களூா் இன்னிங்ஸின்போது 3-ஆவது ஓவரை தில்லி வீரா் அஸ்வின் வீசினாா். அப்போது மறுமுனையில் இருந்த ஆரோன் ஃபிஞ்ச், பந்து அஸ்வின் கைகளில் இருந்து விடுபடும் முன்பாகவே கிரீஸை விட்டுத் தாண்டினாா். அப்போது அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ஃபிஞ்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் எச்சரித்துவிட்டு சிரித்தாா். பிறகு கிரிஸூக்குள் நிற்கும்படி ஃபிஞ்சை நடுவர் அறிவுறுத்தினார். இதைக் கண்ட தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புன்னகை செய்தார். காரணம், இந்த வருட ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாக போட்டி தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தாா். கடந்த வருட ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆரோன் ஃபிஞ்சை மன்கட் முறையில் ரன் அவுட் செய்யாதது குறித்து ட்விட்டரில் அஸ்வின் கூறியதாவது:

தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இதுதான் இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். பிறகு என்னைக் குறை சொல்லவேண்டாம். மேலும், நானும் ஃபிஞ்சும் நல்ல நண்பர்கள் என்று கூறி இந்த ட்வீட்டை ரிக்கி பாண்டிங்குக்கும் டேக் செய்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com