பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்: வார்னர், சாஹா அதிரடியில் அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ரித்திமான் சாஹா களமிறங்கினர். இந்த சீசனின் கடைசி சில ஆட்டங்களில் சிறப்பான அதிரடி தொடக்கத்தை அளித்து வந்த இந்த இணை, இம்முறையும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்தது.

இந்த அதிரடி ஆட்டத்தால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 6 ஆக குறைந்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்த அணி விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் சேர்த்தது.

சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்தியும் ரன் வேகம் குறையவில்லை. முதலில் வார்னர் 35-வது அரைசத்தை எட்டினார். இவரைத் தொடர்ந்து, சாஹா 34-வது பந்தில் அரைசத்தை எட்டினார்.

முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்த இந்த இணை, இறுதிவரை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் வெற்றியை உறுதி செய்தது.

17.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் எடுத்த ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வார்னர் 58 பந்துகளில் 85 ரன்களும், சாஹா 45 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com