ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

150 ரன்கள் இலக்கு: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ஹைதராபாத்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2020, 3:53 pm

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

காயத்திலிருந்து மீண்ட மும்பை கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். 

இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ரோஹித் சர்மா 7 ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சந்தீப் சர்மா வீசிய 5-வது ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்த டி காக் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். சூர்யகுமார் துரிதமாக விளையாட, கிஷன் நிதானம் காட்ட ரன் ரேட் சீராக இருந்து வந்தது. 

நதீம் இரட்டை அடி:

இந்த நிலையில், பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டிய நேரத்தில் சூர்யகுமார் 36 ரன்களுக்கு ஷபாஸ் நதீம் சுழலில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் க்ருணால் பாண்டியாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரஷித் கான் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் சௌரப் திவாரி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், கிஷன் மற்றும் கைரன் பொலார்ட் மீண்டும் ஒரு பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர்.

கடைசி கட்ட அதிரடிக்கு இந்த இணை தயாரானது. சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் அடித்த கிஷன் அடுத்த பந்திலேயே போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் 33 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து, நாதன் கூல்டர் நைல் 1 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.

இந்த நிலையில் நட்ராஜன் 19-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் பொலார்ட் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரிலும் பொலார்ட் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார் பொலார்ட்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.