ஒலிம்பிக்ஸ்:  மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி தோல்வி
ஒலிம்பிக்ஸ்:  மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி தோல்வி

ஒலிம்பிக்ஸ்:  மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி தோல்வி

இன்று காலை நடைபெற்ற மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.


டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இந்தியாவின் அன்னு ராணி 14வது இடத்தைப் பிடித்தார்.

அவர் தனது முதல் வாய்ப்பில் 50.35 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார். இரண்டாவது வாய்ப்பில் 53.19 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 54.04 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார். 

இந்த போட்டியில் முதல் 12 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.  போலந்து வீராங்கனை முதல் வாய்ப்பிலேயே 65.24 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com