ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத், ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற சோஃபியா மேட்சனை 7-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்றார். இதனால் காலிறுதிக்குத் தகுதியடைந்தார் வினேஷ் போகத். 

இதையடுத்து காலிறுதியில் பெலாரஸின் வனேசாவை எதிர்கொண்டார். வினேஷ் போகத்தின் தாக்குதலைச் சாமர்த்தியமாகக் கையாண்டு சிறப்பாக விளையாடிய வனேசா, புள்ளிகள் அதிகம் எடுத்து பிறகு கடைசிக்கட்டத்தில் வினேஷ் போகத்தைக் கீழே சரிய வைத்து வெற்றி கண்டார். அடுத்ததாக வனேசா இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டுமே வெண்கலப் பதக்கத்துக்குப் போட்டியிடும் வாய்ப்பு வினேஷ் போகத்துக்குக் கிடைக்கும். 

57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் 19 வயது அன்ஷு மாலிக், ரஷியாவின் வலேரியாவிடம் 1-5 எனத் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார். அன்ஷு மாலிக் நேற்று பெலாரஸைச் சேர்ந்த ஐரினாவிடம் தோற்றிருந்தாலும் அவர் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதால் அன்ஷு மாலிக்குக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அன்ஷு மாலிக் தோல்வியடைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com