மகளிர் 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணி
மகளிர் 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணி

ஒலிம்பிக்ஸில் மீண்டும் நெ.1: கடைசி நாளன்று சீனாவைப் பின்னுக்குத் தள்ளிய அமெரிக்கா

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கடைசி நாளன்று சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது அமெரிக்கா.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கடைசி நாளன்று சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது அமெரிக்கா.

ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டி, அணிவகுப்பு, கண்கவா் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கைகளுக்குப் பிறகு முடித்து வைக்கப்பட்டது. 

கடைசி நாள் தொடங்கும்போது பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது. இதனால் 2008-க்குப் பிறகு சீனா மீண்டும் முதலிடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதிக தங்கங்களைப் பெறுவதில் வழக்கமாக அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே அதிகப் போட்டி ஏற்படும். 2012, 2016 ஆகிய இரு ஒலிம்பிக்ஸிலும் தலா 46 தங்கப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. எனினும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் 48 தங்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்தது. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கடைசி நாளன்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது அமெரிக்கா. இதையடுத்து பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. நெ.1 அணியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்தது. இதனால் பீஜிங் ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு மீண்டும் முதலிடம் பிடிக்கக் கனவு கண்ட சீனாவுக்குக் கடைசி நாளன்று ஏமாற்றமே கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா 39 தங்கங்களையும் சீனா 38 தங்கங்களையும் வென்றுள்ளன. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பதக்கப் பட்டியல்

 வரிசை   எண் நாடு தங்கம்  வெள்ளி  வெண்கலம்  மொத்தம் 
 1. அமெரிக்கா 39 41 33 113
 2. சீனா   38 32 18 88
 3. ஜப்பான் 27 14 17 58
 4. இங்கிலாந்து 22 21 22 65
 5.ஆர்.ஓ.சி. (ரஷியா)    20 28 23 71
 35.  இந்தியா  1 2 4 7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com