ஒலிம்பிக் பதக்க மங்கை லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி: அசாம் முதல்வர்

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் கௌரவித்தார்.
ஒலிம்பிக் பதக்க மங்கை லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி: அசாம் முதல்வர்


டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் வியாழக்கிழமை கௌரவித்தார்.

லவ்லினாவுக்கான பரிசுகள் குறித்து முதல்வர் கூறியது:

"அசாமுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வந்த லவ்லினாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக் 2024 வரை மாதந்தோறும் ரூ. 1 லட்சம் உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர் பாரிஸில் தங்கம் வெல்வதை கனவாகக் கொண்டுள்ளார். குவாஹட்டியில் ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும். 

லவ்லினாவின் குத்துச்சண்டை பயணத்தில் அங்கமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங் மற்றும் ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் மக்கள் நன்றியின் வெளிப்பாடாக தலா ரூ. 10 லட்சம் வழங்கி கௌரவிக்கப்படும்.

லவ்லினாவின் கிராமம் இடம்பெறும் தொகுதியில் குத்துச்சண்டை அகாடமி வசதியுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com