
ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா போரோகைன்.
மகளிர் குத்துச்சண்டையின் 69 கிலோ பிரிவின் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியின் நாடின் அபட்ஸை இந்திய வீராங்கனை லவ்லினா இன்று எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் நாடினை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், காலிறுதி போட்டியில் லவ்லினா வெற்றி பெற்றாலே இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.