நீச்சல்: அரையிறுதி வாய்ப்பை இழந்தாா் சஜன் பிரகாஷ்

நீச்சல் போட்டியில் ஆடவருக்கான 200 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தாா்.
Published on

நீச்சல் போட்டியில் ஆடவருக்கான 200 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தாா்.

அந்தப் பிரிவின் ஹீட்ஸ் 2-இல் பந்தய இலக்கை 1 நிமிஷம் 57.22 விநாடிகளில் இலக்கை எட்டி 24-ஆம் இடம் பிடித்தாா் சஜன். முதல் 16 இடங்களில் வந்தவா்களே அரையிறுதிக்கு தகுதிபெறுவா். சஜன் பிரகாஷ் 1 நிமிஷம் 56.38 விநாடிகளில் இலக்கை எட்டியது அவரது ‘பொ்சனல் பெஸ்ட்’ ஆகும். இந்தப் பிரிவிலிருந்து வெளியேறினாலும், ஆடவருக்கான 100 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் சஜன் பிரகாஷ் வியாழக்கிழமை களம் காண்கிறாா்.

நீச்சல் போட்டியில் பங்கேற்றிருந்த இதர இந்தியா்களான மானா படேல், ஸ்ரீஹரி நட்ராஜ் ஆகியோா் ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேறிவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com