வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து
By DIN | Published On : 01st August 2021 06:23 PM | Last Updated : 01st August 2021 06:30 PM | அ+அ அ- |

டோக்யோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
டோக்யோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்திற்கான இன்று நடத்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சீன வீராங்கனையை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி.சிந்து.
இதையும் படிக்கலாமே சீனத்தில் மீண்டும் கரோனா அபாயம்..புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
பி.வி.சிந்து வெண்கலம் வென்றதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம் கிடைத்தது. ஏற்கெனவே டோக்யோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
முன்னதாக மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலப் பதங்கங்களை வென்றிருந்தார்.
தற்போது அவரைத் தொடர்ந்து சிந்துவும் ஒலிம்பிக் போட்டியில் 2 பதங்களை வென்ற முதல் வீராங்கனை என்கிற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
2016 ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.