நீண்ட முடியை இதற்காகத்தான் வெட்டினேன்: நீரஜ் சோப்ரா

நீண்ட முடி வைத்துக்கொண்டால் வியர்வை அதிகமாக வரும். முடி என் முகத்தில் எப்போதும் விழுகிறது.
நீண்ட முடியை இதற்காகத்தான் வெட்டினேன்: நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் போட்டியில் நீண்ட முடியால் கவனம் சிதறும் என்பதால் அதை வெட்டிவிட்டதாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 86.65 மீ. தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றார். 

எனினும் மற்றொரு இந்திய வீரரான ஷிவ்பால் சிங், 80 மீ. தூரத்தை எட்டாததால் அவர் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். அவர் அதிகபட்சமாக 76.40 மீ. தூரம் வீசினார். 

23 வயது நீரஜ் சோப்ராவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டி. தகுதிச்சுற்றில் அதிகத் தூரம் வீசியவரும் அவர் தான். 2017 உலக சாம்பியன் ஜோஹன்னஸ் வெட்டரை விடவும் அதிகத் தூரம் வீசியுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற தகுதிச்சுற்றில் 83.50 மீ. தூரம் வீசவேண்டும், அல்லது அதிகத் தூரம் வீசிய முதல் 12 பேரில் ஒருவராக இருக்கவேண்டும். 

இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. 

வழக்கமாக நீண்ட முடியுடன் தோன்றும் நீரஜ் சோப்ரா, இம்முறை குறைந்த முடியுடன் புதிதாகத் தெரிந்தார். தகுதிச்சுற்றுப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நீரஜ் சோப்ரா கூறியதாவது:

என்னுடைய நீண்ட முடியை வெட்டிவிட்டேன். ஸ்விட்சர்லாந்தில் அதைச் செய்தேன். பிறகு மீண்டும் பெரிதாக இருப்பதாக உணர்ந்ததால் ஸ்வீடனிலும் முடி வெட்டினேன். எனக்கு நீண்ட முடியை வைத்துக்கொள்வது பிடிக்கும். பின் பக்கம் நன்கு வளரும். ஆனால் ஒலிம்பிக் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் வரும்.

நீண்ட முடி வைத்துக்கொண்டால் வியர்வை அதிகமாக ஏற்படும். முடி என் முகத்தில் எப்போதும் விழுகிறது. நீண்ட முடி இருந்தால் அதன்மீது கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டியுள்ளது. என்னுடைய ஆட்டத்திறமை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீண்ட முடியை வெட்டிவிட்டேன். ன எண்ணினேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com