'தலித்துகள் அதிகம் இருந்ததே இந்தியாவின் தோல்விக்குக் காரணம்': டோக்கியோ சென்ற பிறகும் தீராத சாதி நோய்

டோக்கியோ ஒலிம்பிக் இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கடாரியா வீட்டில் சாதிவெறியர்கள் இருவர் சாதி ரீதியிலாக இழிவுபடுத்தியுள்ளனர்.
வந்தனா கடாரியா
வந்தனா கடாரியா


டோக்கியோ ஒலிம்பிக் இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கடாரியா வீட்டில் உயர்சாதியினர் இருவர் சாதி ரீதியிலாக இழிவுபடுத்தியுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா புதன்கிழமை தோல்வியடைந்தது. இதன் சில மணி நேரங்களில் ஹரித்வாரில் இருவர், ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீராங்கனை வந்தனா கடாரியா வீட்டில் அவரது குடும்பத்தினரை சாதி ரீதியிலாக இழிவுபடுத்தியுள்ளனர். வீட்டின் வெளியே நடனமாடியும், பட்டாசு வெடித்தும் இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடியுள்ளனர்.

இந்திய அணியில் நிறைய தலித் வீராங்கனைகள் இருந்ததே தோல்விக்குக் காரணம் என்பது அவர்களது கருத்தாக இருந்துள்ளது.

இதையடுத்து, வந்தனாவின் சகோதரர் இதுகுறித்து காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

இதே வந்தனாதான் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து காலிறுதி வாய்ப்பை தக்கவைக்க உதவினார். ஒலிம்பிக் வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடிக்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தவர் வந்தனா என்பது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க'மக்கள்தொகையில் சீனாவை விரைவில் இந்தியா விஞ்சும்'

பதக்கப் பட்டியலில் 33 தங்கம் உள்பட மொத்தம் 73 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் 66-வது இடத்தில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com