

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பணியிலிருந்து விலகவுள்ளதாக ஸூர்ட் மரைனே கூறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்திய மகளிர் ஹாக்கி அணி.
இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணமாக பயிற்சியாளர் ஸூர்ட் மரைனே, பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அவர் கூறியதாவது:
இந்திய மகளிர் அணியுடன் இதுவே என் கடைசி ஆட்டம். எனக்கு வேறு திட்டங்கள் இல்லை. இனிமேல் ஜன்னேகா தான் (அனலிடிகல் பயிற்சியாளர்) கவனித்துக்கொள்ள வேண்டும். என்னுடன் பயிற்சி எடுத்துக்கொண்ட பெண்களை மிகவும் மிஸ் செய்வேன். அதைவிடவும் என் குடும்பத்தினர் முக்கியம். மூன்றரை வருடங்கள் வெளியே இருந்ததால் என் மகன், மகள், மனைவியுடன் இருக்க விரும்புகிறேன். இந்தப் பயணத்தை இந்த அழகான முறையில் நிறைவு செய்ய விரும்புகிறேன் என்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக 2017-ல் முதலில் பதவியேற்றார் ஸூர்ட் மரைனே. பிறகு ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2018-ல் மீண்டும் மகளிர் அணியின் பயிற்சியாளர் ஆனார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.