டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய அணிக்கு இன்றே கடைசி நாள்

நாடே எதிர்பார்க்கும் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.
நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நாளையுடன் நிறைவு பெறுகிற நிலையில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் இன்று முடிவடைகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 அன்று தொடங்கி நாளையுடன் நிறைவுபெறுகிறது. (இன்று மதியம் 3 மணி நிலவரப்படி) பதக்கப் பட்டியலில் இந்திய அணி 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் 66-வது இடத்தில் உள்ளது. 

இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் இன்றும் முடிவடைகின்றன. இன்று காலை நடைபெற்ற கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக், 4-ம் இடம் பிடித்து நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.

அடுத்ததாக மல்யுத்தம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பங்கேற்கிறார். இன்று மாலை 3.55 மணி முதல் (இந்திய நேரம்) மல்யுத்தப் போட்டிகள் நடைபெறும்.

இதையடுத்து இன்று மாலை 4.30 மணிக்கு, நாடே எதிர்பார்க்கும் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். தங்கம் அல்லது வெள்ளி என இரண்டில் ஒன்றை நிச்சயம் வெல்வார் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியின் முடிவை எதிர்பார்க்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com