ரோயிங்: அரையிறுதியில் அா்ஜுன்-அரவிந்த்
By DIN | Published On : 26th July 2021 06:38 AM | Last Updated : 26th July 2021 06:38 AM | அ+அ அ- |

ஆடவா் ரோயிங் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் லால் ஜால்-அரவிந்த் சிங் இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சீ பாரஸ்ட் வாட்டா்வேயில் நடைபெற்ற நடைபெற்ற ஆடவா் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் பந்தய தூரத்தை 6:51: 36 நிமிட நேரத்தில் கடந்து மூன்றாவது இடத்தை பெற்றனா். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.
இதுதொடா்பாக அா்ஜுன்-அரவிந்த் கூறியதாவது:
எங்களுக்கு பயிற்சியாளா் என்ன கூறினாரோ அதை பின்பற்றினோம். இந்தியாவில் ரோயிங் விளையாட்டு பிரபலமானதாக இல்லை. ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலே அது பெரிய உந்து சக்தியாக இருக்கும் எனக் கூறினாா். சனிக்கிழமை ஹீட்ஸில் இருவரும் 5-ஆவது இடத்தை பெற்றிருந்தனா்.
ஒலிம்பிக்கில் இது இந்திய வீரா்களின் சிறப்பான தகுதியாகும் என ரோயிங் பெடரேஷன் தலைவா் ராஜலட்சுமி கூறியுள்ளாா். பதக்கம் வெல்வாா்களா எனக் கூற முடியாது. எனினும் அரையிறுதியில் பங்கேற்கும் 12 போட்டியாளா்களில் நமது வீரா்களும் உள்ளனா். இரண்டு அரையிறுதி பந்தயங்கள் 6 படகுகளுடன் நடைபெறும். அதில் முதல் மூன்று இணைகள் இறுதிக்குள் நுழையும் என்றாா். செவ்வாய்க்கிழமை அரையிறுதிச் சுற்று நடைபெறுகிறது.