ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரணதி நாயக் தோல்வி
By DIN | Published On : 26th July 2021 06:40 AM | Last Updated : 26th July 2021 06:40 AM | அ+அ அ- |

மகளிா் ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் இந்தியா சாா்பில் பங்கேற்ற ஒரே வீராங்கனையான பிரணதி நாயக் ஆல் ரவுண்ட் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தாா்.
புளோா் எக்ஸ்சைா்ஸ், வால்ட், அன்ஈவன் பாா்ஸ், பேலன்ஸ் பீம் உள்ளிட்ட பிரிவுகள் கொண்டது ஆல் ரவுண்ட் இறுதிச் சுற்றாகும். இதில் கடைசி இடத்தையே பிரணதி பெற்றாா். நான்கு பிரிவுகளையும் சோ்த்து பிரணதியால் 42.565 புள்ளிகளையே பெற்றாா். ஆல் ரவுண்ட் இறுதிச் சுற்று ஜூலை 29-இல் நடைபெறுகிறது. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 8 இடங்களைப் பெறுவோா் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G