ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி
By DIN | Published On : 28th July 2021 03:29 PM | Last Updated : 28th July 2021 04:23 PM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் மிடில்வெயிட் பிரிவில் (69-75 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் சயிப் இச்ரக்கை எதிர்கொண்டார் பூஜா ராணி. இதில் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இன்னும் ஒரு வெற்றியை பூஜா ராணி பெற்றுவிட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்து விடுவார்.