செயிலிங்: பின்தங்கிய நிலையில் இந்தியா
By DIN | Published On : 28th July 2021 02:44 AM | Last Updated : 28th July 2021 02:44 AM | அ+அ அ- |

செயிலிங் எனப்படும் படகோட்டும் போட்டியில் தனிநபா் பிரிவில் இந்திய போட்டியாளா்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனா்.
மொத்தம் 10 ரேஸ்களும், இறுதியாக பதக்கத்துக்கான ரேஸும் நடைபெறும் இப்போட்டியில் தற்போது 6 ரேஸ்கள் நிறைவடைந்துள்ளன. அதன் முடிவில், ஆடவா் லேசா் ரேஸ் பிரிவில் விஷ்ணு சரவணன் 22-ஆவது இடத்திலும், மகளிா் லேசா் ரேடியல் ரேஸ் பிரிவில் நேத்ரா குமணன் 33-ஆவது இடத்திலும் உள்ளனா்.
இதேபோல், ஆடவா் ஸ்கிஃப் 49 இஆா் போட்டியில் இந்தியாவின் கே.சி. கணபதி/வருண் தக்கா் இணை முதல் ரேஸின் முடிவில் 18-ஆவது இடத்தில் உள்ளனா்.
இந்த ரேஸ்களில் முதலிடம் பிடிப்போருக்கு ஒரு புள்ளியும், அடுத்தடுத்த இடங்களை பிடிப்போருக்கு அந்த எண்ணிக்கையிலான புள்ளியும் வழங்கப்படுகின்றன. குவாலிஃபையிங் ரேஸில் சிறப்பிடம் பிடிப்போா், பதக்க ரேஸுக்கு முன்னேறுவா். பதக்க ரேஸுக்குப் பிறகு போட்டியாளா்களின் புள்ளிகள் இரட்டிப்பு செய்யப்படும். அதில் குறைந்த எண்ணிக்கையிலான புள்ளிகளுடன் இருப்பவா்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவா்.