ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் யாருக்கு முதலிடம்?: சீனா, அமெரிக்காவுக்குக் கடும் சவாலாக விளங்கும் ஜப்பான்!

பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே கடும் போட்டி  நிலவுகிறது...
ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் யாருக்கு முதலிடம்?: சீனா, அமெரிக்காவுக்குக் கடும் சவாலாக விளங்கும் ஜப்பான்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே கடும் போட்டி  நிலவுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. அதிக தங்கங்கள், அதிகப் பதக்கங்களைப் பெறுவதில் வழக்கமாக அமெரிக்கா, சீனா இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடையே அதிகப் போட்டி ஏற்படும். 2012, 2016 ஆகிய இரு ஒலிம்பிக்ஸிலும் தலா 46 தங்கப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. எனினும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் 48 தங்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்தது. பதக்கப் பட்டியலில் இவர்களுக்குப் பின்னால் ரஷியா பின்தொடரும்.

இம்முறை ஒலிம்பிக்ஸ் டோக்கியோவில் நடைபெறுவதால் அமெரிக்கா, சீனா நாடுகளுக்குக் கடும் சவாலாக உள்ளது ஜப்பான் அணி. இன்று (ஜூலை 29) காலை 11 மணி நிலவரப்படி 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது சீனா. இதற்கு மிக நெருக்கத்தில் உள்ளன அமெரிக்காவும் ஜப்பானும். அமெரிக்கா 13, ஜப்பான் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று சீனாவைப் பின்னுக்குத் தள்ளக் காத்திருக்கின்றன. எனினும் அதிகப் பதக்கங்களை வென்ற நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இதுவரை 36 பதக்கங்கள். சீனா 29, ஜப்பான் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com