டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதியில் ஜப்பானின் யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் ஜப்பானின் யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பி.வி. சிந்து. 

2016 ரியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து. பிறகு 2019-ல் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் காலிறுதியில் ஜப்பானின் யமகுச்சியை எதிர்கொண்டார் சிந்து. முதல் கேமின் ஆரம்பத்தில் யமகுச்சி சிறப்பாக விளையாடினார். ஆனால் அவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த சிந்து வாய்ப்பளிக்கவில்லை. அட்டகாசமாக விளையாடி 21-13 என முதல் கேமை வென்றார் சிந்து.

2-வது கேமில் யமகுச்சி ஓரளவு ஈடுகொடுத்து விளையாட முயன்றாலும் சிந்துவின் வேகத்தை அவரால் சமாளிக்க முடியாமல் போனது. 14-8 என முன்னிலை பெற்றார். அதன்பிறகு யமகுச்சி சிறப்பாக விளையாடி 16-15 என முன்னிலை பெற்றார். எனினும் கடைசி கேமை 22-20 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் சிந்து. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com