
ஆடவா் ஆட்டம் நிறைவு
ஆடவா் தனிநபா் ரீகா்வ் வில்வித்தையில் இந்தியாவின் பிரவிண் ஜாதவ் முதல் சுற்றிலேயே 0-6 என்ற கணக்கில் சீனாவின் காவ் வென்சாவிடம் தோல்வி கண்டாா். ஏற்கெனவே, தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா ஆகியோரும் தொடக்க நிலையிலேயே வெளியேறியதால், தற்போது ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய ஆடவா்களின் ஆட்டம் நிறைவடைந்தது. மகளிா் தனிநபா் பிரிவில் தீபிகா குமாரி, பஜன் கௌா் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களத்தில் உள்ளனா்.
இந்த ஒலிம்பிக்கில் இந்திய வில்வித்தை போட்டியாளா்கள் சோபிக்கவில்லை. அணிகள் பிரிவிலும் இந்தியாவின் ஆடவா், மகளிா் அணிகள் காலிறுதியில் தோற்று வெளியேறிவிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.