
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில், மகளிா் தனிநபா் பிரிவில் காலிறுதிப் போட்டியில் தீபிகா குமாரி தென் கொரியாவின் நாம் சுஹியோனை எதிர்கொண்டார்.
தீபிகா குமாரி பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இன்று(ஆக. 3) மாலை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தீபிகா குமாரி தென் கொரியாவின் நாம் சுஹியோனிடம் வீழ்ந்தார்.
காலிறுதிப் போட்டியில், முதல் செட்டை கைப்பற்றி அசத்திய தீபிகா, 5-வது மற்றும் இறுதி செட் சுற்றில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். காலிறுதிச் சுற்றில் 4 - 6 என்ற செட் கணக்கில் தீபிகா குமாரி தோல்வியடைந்து வெளியேறினார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை இந்திய வில்வித்தை போட்டியாளா்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அணிகள் பிரிவிலும் இந்தியாவின் ஆடவா், மகளிா் அணிகள் காலிறுதியில் தோற்று வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.