
இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்த இந்தியா்கள்
துப்பாக்கி சுடுதலில் இரு பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை களம் கண்ட இந்தியா்கள், அதில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா். ஆடவருக்கான 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் தகுதிச்சுற்றில் விஜய்வீா் சித்து, அனிஷ் பன்வாலா ஆகியோா் விளையாடினா். இதில் விஜய்வீா் சித்து, முதல் நிலையில் 293, அடுத்த நிலையில் 290 என, மொத்தமாக 583 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தாா். அனிஷ் பன்வாலா, முதல் நிலையில் 293, அடுத்த நிலையில் 289 என, மொத்தமாக 582 புள்ளிகளுடன் 13-ஆம் இடம் பிடித்தாா். இப்பிரிவில் முதல் 6 இடங்களில் வருவோருக்கே இறுதிச்சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கீட்: இதனிடையே, மகளிருக்கான ஸ்கீட் தகுதிச்சுற்றில், 5 ரவுண்டுகள் முடிவில் மகேஸ்வரி சௌஹான் 118 புள்ளிகளுடன் 14-ஆவது இடமும், ராய்ஸா தில்லன் 113 புள்ளிகளுடன் 23-ஆவது இடமும் பிடித்தனா். இதிலும் முதல் 6 இடங்களில் வருவோரே பதக்க சுற்றுக்கு தகுதிபெறுவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.