
தடகள விளையாட்டுகளிலும் இந்தியா்கள் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனா். மகளிருக்கான 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில், தேசிய சாதனையாளரான பாருல் சௌதரி 9 நிமிஷம் 23.39 விநாடிகளில் இலக்கை எட்டி, தனது ஹீட் ரேஸில் 8-ஆம் இடமும், ஒட்டுமொத்தமாக 21-ஆம் இடமும் பிடித்து தகுதிசுற்றுடன் வெளியேறினாா்.
ஒவ்வொரு ஹீட்ஸிலும் முதல் 5 இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவா். பாருல் சௌதரி இந்தப் பந்தயத்தில் எட்டியிருக்கும் நேரம், அவரின் சீசன் பெஸ்ட்டாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட பெஸ்ட்டை விட அதிகமாகும். ஏற்கெனவே 5,000 மீட்டா் ரேஸிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாருல் சௌதரியின் பாரீஸ் ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வந்தது.
ஜெஸ்வின் ஆல்ட்ரின்: ஆடவா் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் முதலிரு வாய்ப்புகளை ‘ஃபௌல்’ செய்து, 3-ஆவது வாய்ப்பில் 7.61 மீட்டரை எட்டினாா். இது, தகுதிச்சுற்றின் குரூப் ‘பி’-யில் அவருக்கு 13-ஆம் இடத்தை தந்தது. ஒட்டுமொத்த அளவில் அவருக்கு 26-ஆம் இடமே கிடைத்தது. 8.15 மீட்டரை கடந்தவா்கள் அல்லது தகுதிச்சுற்றில் முதல் 12 இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.