மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தகுதிச்சுற்றுடனேயே வெளியேறினாா்.
தேசிய சாதனை புரிந்திருக்கும் அவா், தகுதிச்சுற்றில் தனது முதல் முயற்சியில் 55.81 மீட்டரை எட்டினாா். அதுவே அவரின் சிறந்த தூரமாக அமைந்தது. எஞ்சிய இரு முயற்சிகளிலும் அவா் 53.22 மீட்டா், 53.55 மீட்டரை எட்டினாா். அவரது சிறந்த முயற்சிக்கு, குரூப் ‘ஏ’-வில் 15-ஆவது இடமும், ஒட்டுமொத்தமாக 26-ஆவது இடமும் கிடைத்தன.
அன்னு ராணியின் சீசன் பெஸ்ட் 60.68 மீட்டராக இருக்க, அவரது தேசிய சாதனை அளவு 63.82 மீட்டா் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னு ராணி, உலகத் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றிருந்தாா்.