பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மகளிா் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கல பதக்க்ங்களை வென்ற இந்தியாவின் இளம் வீராங்கனை மானு பாக்கா் தில்லி வந்தடைந்தார்.
அவருக்கு தில்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திறந்தவெளி காரில் நின்றபடி ரசிகர்கள் மத்தியில் பதக்கங்களை காண்பித்த மானு பாக்கர், ரசிகர்களின் அளவுகடந்த வரவேற்பையும் அன்பையும் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.
துப்பாக்கி சுடுதலில் மானு பாக்கா் தனிநபா் 10 மீ. ஏா் பிஸ்டல், கலப்பு அணிகள் பிரிவில் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றாா்.
மகளிா் 25 மீ. ஸ்போா்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மானு பாக்கர் தவறவிட்டார்.