டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய மகளிர் தோல்வி

டேபிள் டென்னிஸில் மகளிர் அணி பிரிவில் இந்தியா காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய மகளிர் தோல்வி
Published on
Updated on
1 min read

டேபிள் டென்னிஸில் மகளிர் அணி பிரிவில் இந்தியா காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

இதையடுத்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மகளிர் அணி காலிறுதியில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது.

முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா/அர்ச்சனா காமத் இணை 5-11, 11-8, 10-12, 6-11 என்ற கணக்கில் யுவான் வான்/ஜியானா ஷான் இணையிடம் தோற்றது. பின்னர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா 11-8, 5-11, 7-11, 5-11 என ஆனெட் கெüஃப்மானிடம் தோல்வி கண்டார்.

எனினும் 2-ஆவது ஒற்றையரில் அர்ச்சனா காமத் 19-17, 1-11, 11-5, 11-9 என ஜியானா ஷானை வீழ்த்தி அசத்தினார். என்றபோதும், 3-ஆவது ஒற்றையரில் ஸ்ரீஜா அகுலா 6-11, 7-11, 7-11 என்ற கணக்கில் ஆனெட் கெüஃப்மானிடம் வீழ, ஜெர்மனி 3-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

கோல்ஃப்: தீக்ஷா, அதிதி பின்னடைவு

மகளிர் கோல்ஃப் விளையாட்டில் முதல் சுற்று முடிவில் இந்தியாவின் தீக்ஷா தாகர் 71 புள்ளிகளுடன், 5 பேரோடு 7-ஆம் இடத்தையும், அதிதி அசோக் 72 புள்ளிகளுடன் 13 பேரோடு 12-ஆம் இடத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com