
ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று கியூபா வீரர் மிஜைன் லோபஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆடவருக்கான மல்யுத்தப் போட்டியில் 5 முறை தங்கம் வென்ற முதல்வீரர், தனிநபர் பிரிவில் 5 முறை தங்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் கியூபாவின் மிஜைன் லோபஸ்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 130 கிலோ எடைப்பிரிவு கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என வீழ்த்தி தங்கம் வென்றதன் மூலம் 41 வயதான மிஜைன் லோபஸ் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை அதிகபட்சமாக 4 பேர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் (நீச்சல்), கார்ல் லீவிஸ் (நீளம் தாண்டுதல்), அல் ஓர்டர் (வட்டு எறிதல்), டென்மார்க்கின் பால் எல்வ்ஸ்ட்ரோம் மற்றும் கயோரி இச்சோ ஆகிய வீரர்களுடன் கியூபாவின் மல்யுத்த வீரர் மிஜைன் லோபஸ் வீரரும் இணைந்திருக்கிறார்.
கியூபாவின் மல்யுத்த ஜாம்பவானான மிஜைன் லோபஸ் ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற முதல் வீரராக புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இவர் ஒலிம்பிக்கில் 5 தங்கப்பதக்கம் வென்றதும், தொடர்ச்சியாக ஒருவர் 5 தங்கப்பதக்கம் வெல்வதும் இதுவே முதல்முறையாகும்.
மிஜைன் லோபஸ் தங்கம் வென்ற ஒலிம்பிக்ஸ்
1. பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்(2008)
2. லண்டன் ஒலிம்பிக்ஸ்(2012)
3. ரியோ ஒலிம்பிக்ஸ்(2016)
4. டோக்கியோ ஒலிம்பிக்ஸ்(2020)
5. பாரீஸ் ஒலிம்பிக்ஸ்(2024)
மேலும், மிஜைன் லோபஸ் தங்கம் வென்றவுடனேயே, தான் மல்யுத்தத்தில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்து குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.