பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் அமன் காலிறுதிக்கு முன்னேற்றம்!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தின் 16வது சுற்றில் அமன் ஷெராவத் வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த விளாடிமிர் எகோரோவ்வை 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தத்தில் அன்சூ மாலிக் இன்று களம் காண்கிறார். அன்சூ மாலிக்கும், அமன் ஷெராவத்தும் பதக்கத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை நடைபெற்ற பெண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த 50 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் துரதிர்ஷ்டவசமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஹரியாணாவைச் சேர்ந்த இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரரான அமன் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, ஏப்ரல் 2023 இல், கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.