தடைகளைத் தகர்த்து தங்கம் வென்ற கெலிஃப்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்
Imane Khelif
பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்AP
Published on
Updated on
2 min read

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் குத்துச்சண்டைப் பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃப் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்.

பாரீஸில் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டி ஆக. 9, வெள்ளிக்கிழமை, நடைபெற்றது. இந்தப் போட்டியில் சீனாவின் யாங் லியூவை எதிர்த்து அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் போட்டியிட்டார்.

அந்தப் போட்டியில், அல்ஜீரியாவின் கெலிஃப், சீனாவின் யாங் லியூவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம், அல்ஜீரிய ஒலிம்பிக் வரலாற்றில், குத்துச்சண்டைப் பிரிவில் இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றவராகவும், குத்துச்சண்டை பெண்கள் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் என்ற சாதனையையும் கெலிஃப் படைத்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனாவின் யாங் லியூவை எதிர்த்து அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் போட்டியிட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனாவின் யாங் லியூவை எதிர்த்து அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் போட்டியிட்டார். AP

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் கெலிஃபுக்கும், இத்தாலிய வீராங்கனை ஏஞ்ஜெலா காரினிக்கும் இடையே போட்டி நடந்தது. ஆனால், கெலிஃபின் அடியைத் தாங்க முடியாமல், போட்டி தொடங்கிய 45 வினாடிகளிலேயே, போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தார்.

மேலும், ``கெலிஃபின் தாக்குதல் ஒரு பெண்ணைப் போன்றதாக இல்லை. அதனால், நான் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’’ என்று கூறிய இத்தாலிய வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் உள்பட, உலகளவில் பலரும் கெலிஃப் மீதான கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, தன்னுடனான இந்த நிகழ்வு பெரியளவில் சர்ச்சையானதையடுத்து, கெலிஃபிடம் காரினி மன்னிப்பு கோரினார்.

Imane Khelif
பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்AP

கெலிஃப் மீதான விமர்சனங்களை வீசியவர்களிடம், `வெறுக்கத்தக்கப் பேச்சு’ என்று ஒலிம்பிக் தலைவர் தாமஸ் பேச் கூறியிருந்தார்.

கெலிஃபின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது சொந்த நகரமான டியாரெட் நகரில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கடுமையான கோடை வெப்பத்திலும், கெலிஃபின் சுவரோவியங்களை டியாரெட் நகர மக்கள் பல்வேறு இடங்களில் வரைந்து வருகின்றனர்.

Imane Khelif
நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பில் மனு பாக்கருடன் கொடியேந்தும் ஸ்ரீஜேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com