மீண்டும் ப்ரொமான்ஸ்... தங்கப் பதக்கத்தை பகிர்ந்துகொண்ட தங்க வீரர்கள்!

பாரீஸ் ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கத்தை பகிர்ந்துகொண்ட தங்க வீரர்கள்!
இத்தாலி - கத்தார் வீரர்கள் (கோப்புப்படம்)
இத்தாலி - கத்தார் வீரர்கள் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பாரீஸ்: டோக்யோ ஒலிம்பிக் போட்டியில், இத்தாலி - கத்தார் நாடுகளைச் சேர்ந்த உயரம் தாண்டும் வீரர்கள் தங்களுக்குள் காட்டிக்கொண்ட ஒரு அன்பு (ப்ரொமன்ஸ்) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் ஒளிர்ந்துள்ளது.

கடந்த கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இத்தாலியின் ஜியான்மர்கோ தம்பேரி - கத்தாரின் முடாஸ் பர்ஷிம் ஆகியோர் தங்களுக்குள் விட்டுக்கொடுத்து தங்கப் பதக்கத்தை பகிர்ந்துகொண்டனர். அப்போது அவர்கள் பெரிய அளவில் நாளிதழ்களில் செய்தியான நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாக இருந்தும் கூட இருவருக்குள்ளும் ஒரு ப்ரொமான்ஸ் (ஆண்களுக்குள் காதல் அல்லாமல் உருவாகும் அன்பு) உருவாகி அது பாரீஸ் ஒலிம்பிக் வரை நீடித்து வருகிறது.

ஒரு விளையாட்டு வீரரின் அதிகபட்ச கனவே ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான். ஆனால், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் யாருக்கு என்பதை உறுதி செய்வதற்கான ஆட்டத்தில் பங்கேற்பதற்கு பதிலாக, தங்கப் பதக்கத்தை பகிர்ந்துகொள்வது என்று அறிவிப்பது வரை சென்றிருக்கிறது இவர்களது ப்ரொமான்ஸ்.

உலக தடகள விதிமுறை புத்தகத்தில் இருக்கும் ஒரே ஒரு விதிவிலக்கை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டிருக்கிறார் கத்தார் வீரர்.

இந்த நிகழ்வின்போது, தம்பேரி, பர்ஷிமை ஆரத்தழுவி, அவரை போர்வை போல கட்டிக்கொள்ளும் காட்சி வைரலாகியிருக்கிறது. இருவருக்கும் தங்கப் பதக்கம் பகிர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில், இருவரும் மோதினர். உயரம் தாண்டும்போது, இருவரும் சம அளவில் இருந்தனர். கடைசியாக பர்ஷிம் உயரம் தாண்ட முயன்றபோது காயமடைந்து கீழே விழுகிறார். அவருக்கு ஓடிச்சென்று உதவிய முதல் நபர் தம்பேரிதான். இருவரும் இறுதிக்கு முன்னேறிவிட்டனர். இவர்கள் 2.27 மீட்டர் உயரம் தாண்டி சாதனையும் படைத்திருக்கிறார்கள்.

இரண்டு சாம்பியன்களான ஜியான்மார்கோ தம்பேரி மற்றும் முடாஸ் பர்ஷிம் ஆகியோர் உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர், ஆனால் இத்தாலிய வீரர் 2.27 மீட்டரில் மூன்று முறை முயன்றும் தோல்வியடைிந்தார். ஆனால், கத்தார் போட்டியாளர் காயத்திற்கு நீண்ட சிகிச்சைக்குபெற்று வந்த நிலையிலும் கூட, இலக்கை அடைந்துவிட்டார்.

இந்த நிலையில், கத்தார் போட்டியாளர் பதக்கத்தை உறுதி செய்யும் ஆட்டத்தில் பங்கேற்காவிட்டால், தங்கப் பதக்கம் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்ற விதியை கேட்டுத் தெரிந்துகொண்டு, அடுத்த சுற்றில் போட்டியிடாமல் தவிர்த்துவிட்டார். இதனால், இருவருக்கும் தங்கப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

போட்டித்திறனில் ஒரே அளவில் இருக்கும் இரு போட்டியாளர்களுக்குள் யார் யாரை முதலில் வீழ்த்துவது என்ற சவாலுக்கு மாறாக, போட்டிகளைத் தாண்டி, அவர்கள் வென்ற தங்கப் பதக்கத்தைப் போல ஜொலிக்கிறது அவர்களது நட்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com