ஒலிம்பிக் போட்டி தொடக்கம்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியீடு!
பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்தை சிறப்பு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்துடன் கூகுள் வெளியிட்டுள்ளது.
தொடக்க விழாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக, (ஜூலை 24) வில்வித்தை, கால்பந்து, கைப்பந்து மற்றும் ரக்பி ஆகியவற்றில் ஆரம்ப சுற்றுகளுடன் போட்டி தொடங்கியது.
இந்திய அணி சார்பில் 70 ஆண்கள், 47 பெண்கள் உள்பட 95 பதக்கங்களுக்காக 69 போட்டிகளில் 117 போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
பாரிஸில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களில் ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஓவியத்துக்கான வடிவமைப்பாளரின் பெயரை கூகுள் வெளியிடவில்லை. பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் விலங்குகள் நீந்துவது போல அந்த சித்திரத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26) பாரீஸ் நகரில் அதிகாரபூர்வமாக துவங்குகிறது. திறப்பு விழா பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் நடைபெறும். கொடிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட நிறைவு விழா ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.