12 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம்

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
 மானு பாக்கர்
மானு பாக்கர்
Published on
Updated on
3 min read

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். போட்டியின் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கும் பதக்கம் இதுவாகும். இதே விளையாட்டில் மேலும் இரு இந்தியர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, பதக்கத்துக்கு இலக்கு வைத்துள்ளனர்.

33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-ஆம் நாளான

ஞாயிற்றுக்கிழமை பாட்மின்டன், ரோயிங், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், நீச்சல், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் இந்தியர்கள் பங்கேற்றனர். அதன் விவரம்:

துப்பாக்கி சுடுதல்

ரமிதா ஏற்றம்; இளவேனில் ஏமாற்றம்

10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் பிரிவு தகுதிச்சுற்றில், இந்தியாவின் ரமிதா 631.5 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றில் இடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகளுடன் 10-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை தவறவிட்டார். தகுதிச்சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வருவோரே இறுதிச்சுற்றில் இடம் பிடிப்பர்.

அர்ஜுன் முன்னேற்றம்: 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் பிரிவு தகுதிச்சுற்றில், அர்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளார். இவருக்கான இறுதிச்சுற்று திங்கள்கிழமை நடைபெறுகிறது.

பாட்மின்டன்

ரமிதா ஏற்றம்; இளவேனில் ஏமாற்றம்

10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் பிரிவு தகுதிச்சுற்றில், இந்தியாவின் ரமிதா 631.5 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றில் இடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகளுடன் 10-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை தவறவிட்டார். தகுதிச்சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வருவோரே இறுதிச்சுற்றில் இடம் பிடிப்பர்.

அர்ஜுன் முன்னேற்றம்: 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் பிரிவு தகுதிச்சுற்றில், அர்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளார். இவருக்கான இறுதிச்சுற்று திங்கள்கிழமை நடைபெறுகிறது.

பாட்மின்டன் சிந்து, பிரணாய் வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவு குரூப் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து முதல் ஆட்டத்தில் 21-9, 21-6 என்ற கேம்களில் மாலத்தீவுகளின் ஃபாத்திமா அப்துல் ரஸôக்கை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை அவர் 29 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

தொடக்க நிலையில், தவிர்த்திருக்கக் கூடிய சில தவறுகளைச் செய்த சிந்து, பின்னர் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முன்னிலை பெற்றார். முதல் கேமில் அப்போது பெற்ற முன்னிலையை இறுதிவரை தக்கவைத்து வென்றார் சிந்து. அவர் அடுத்த ஆட்டத்தில், எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.

அதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ். பிரணாய் 21-18, 21-12 என்ற கேம்களில் ஜெர்மனியின் ஃபாபியான் ரோத்தை வீழ்த்தினார்.

அஸ்வினி/தனிஷா தோல்வி: மகளிர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்றில் அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 18-21, 10-21 என்ற கேம்களில் தென் கொரியாவின் கிம் சோ யோங்/காங் ஹி யோங் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. முதல் கேமை சிறப்பாகத் தொடங்கிய இந்திய ஜோடி, பின்னர் அந்த நிலையை அப்படியே தொடரத் தடுமாறியது. இதனால் தென் கொரிய இணை ஆதிக்கம் செலுத்தி வென்றது.

அஸ்வினி/தனிஷா கூட்டணி அடுத்த ஆட்டத்தில், ஜப்பானின் சிஹரு ஷிடா/நமி மட்சுயாமா கூட்டணியுடன் மோதுகிறது.

டேபிள் டென்னிஸ் சரத் கமல் அதிர்ச்சி

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரரான சரத் கமல் 12-10, 9-11, 6-11, 7-11, 11-8, 10-12 என்ற கணக்கில் ஸ்லோவேனியாவின் டெனி கொஸுலிடம் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார். இந்த ஆட்டம் 53 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. சர்வதேச தரவரிசையில் சரத் கமலை விட டெனி 86 இடங்கள் பின்தங்கியவர். 5-ஆவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சரத் கமலுக்கு, இதுவே கடைசி போட்டியாகும்.

மனிகா, ஸ்ரீஜா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரதான வீராங்கனையான மனிகா பத்ரா 11-8, 12-10, 11-9, 9-11, 11-5 என்ற கணக்கில் பிரிட்டனின் அனா ஹர்சேயை 41 நிமிஷங்களில் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் பிரான்ஸின் பிரீத்திகா பவடேவை எதிர்கொள்கிறார்.

அதேபோல், ஸ்ரீஜா அகுலா 11-4, 11-9, 11-7, 11-8 என்ற கணக்கில் ஸ்வீடனின் கிறிஸ்டினா கால்பெர்கை வெளியேற்றினார். 30 நிமிஷங்களில் இந்த ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் அகுலா.

வில்வித்தை: மகளிரணி காலிறுதியில் தோல்வி

இந்தியாவின் தீபிகா குமாரி, பஜன் கௌர், அங்கிதா பகத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, காலிறுதிச்சுற்றில் 0-6 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. பிரதான வீராங்கனையான தீபிகா இதில் சோபிக்காமல் போக, அங்கிதா பகத் அசத்தலாக செயல்பட்டபோதும் பலனில்லாமல் போனது.

ரோயிங் : காலிறுதியில் பல்ராஜ் பன்வர்

துடுப்புப் படகு போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் பன்வர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக ரெபிசேஜ் 2-இல் அவர் 7 நிமிஷம் 12.41 விநாடிகளில் வந்து 2-ஆம் இடம் பிடித்தார். இந்தப் பிரிவில் முதலிரு இடங்களைப் பிடிப்பவர்கள் காலிறுதியில் இடம் பெறுவர்.

தொடக்கத்திலிருந்தே 2-ஆம் நிலையில் இருந்த பல்ராஜ் பன்வர், 500 மீ மார்க்கை 1 நிமிஷம் 44.13 விநாடிகளிலும், 1000 மார்க்கை 3 நிமிஷம் 33.94 விநாடிகளிலும், 1,500 மார்க்கை 5 நிமிஷம் 23.22 நிமிஷங்களிலும் கடந்து 2,000 மார்க்கை எட்டினார். இந்த விளையாட்டின் காலிறுதிச்சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

நீச்சல்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு

நீச்சல் போட்டியில் களத்திலிருந்த இந்தியர்கள் இருவருமே அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினர். ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரி நட்ராஜ் 55.01 விநாடிகளில் இலக்கை எட்டி தனது ஹீட்ஸில் 2-ஆம் இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவருக்கு 33-ஆம் இடமே கிடைத்தது.

மகளிருக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸில் தினிதி தேசிங்கு, 2 நிமிஷம் 6.96 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். எனினும் ஒட்டுமொத்த அளவில் அவருக்கு 23-ஆவது இடமே கிடைத்தது. இந்தப் பிரிவுகளில் ஒட்டுமொத்த அளவில் முதல் 16 இடங்களில் வருவோர் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறுவர்.

டென்னிஸ்: நாகல் ஏமாற்றம்

டென்னிஸ் ஒற்றையரில் களத்திலிருந்த ஒரே இந்திய வீரரான சுமித் நாகல், முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் அவர், 2-6, 6-4, 5-7 என்ற செட்களில், பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டிடம் 2 மணி நேரம் 28 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 2-ஆவது சுற்று வரை நாகல் முன்னேறியது நினைவுகூரத்தக்கது.

நடப்பு ஆண்டில் அவர் இதர போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்தியா இன்று...

dinmani online

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com