29-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய விராட் 'கிங்' கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இன்று தனது 29-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
29-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய விராட் 'கிங்' கோலி

தலைநகர் தில்லியில் 1988-ம் வருடம், டிசம்பர் 5-ந் தேதி பிறந்தார். சிறு வயது முதலே சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகராக இருந்த கோலியும் கிரிக்கெட் விளையாட்டில் தடம் பதித்தார்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பயங்கேற்ற இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

அந்தத் தொடரில் பேட்ஸ்மேனாக ஜொலித்த கோலி, ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பை பெற்றுத் தந்தார். பின்னர் அதே ஆண்டு இறுதியில் நடைபெற்ற இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

தனது குணத்தில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ஆக்ரோஷமாக செயல்பட்ட கோலி, பல சாதனைகளைப் படைத்தார். அதுமட்டுமல்லாமல் தனது ஆட்டத்தையும் மேம்படுத்தி வந்தார். ஒரு போட்டியில் செய்த தவறை மறு போட்டியில் திருத்திக் கொண்டார்.

எதிரணிகள் நிர்ணயித்த பல கடின இலக்குகளையும் இந்திய அணி துரத்திப் பிடித்து வெற்றிபெற விராட் கோலி முக்கியப் பங்கு வகித்தார். இதனால் அவரை 'சேஸிங் மன்னன்' என அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்தனர்.

சேவாக், யுவராஜ், தோனி, ஹர்பஜன் உள்ளிட்டோர் கோலோச்சிய காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் இளவரசனாய் நுழைந்த கோலி இப்போது 'கிங்' கோலியாக உயர்ந்துள்ளார். இந்திய அரசால் அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

  போட்டிகள்இன்னிங்ஸ்நாட்-அவுட்ரன்கள்அதிகபட்சம்சராசரி100504s6sகேட்ச்
டெஸ்ட்60101  74658235 49.5517145261357
ஒருநாள்202 19432 9030    18355.7432458399894
டி20 545014194390*53.970182073927

இந்நிலையில், விராட் கோலி தனது 29-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியுடன் அவர் இம்முறை கேக் வெட்டி மகிழ்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com