கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 7-ஆம் தேதி) கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், 2-ஆவது லீக் ஆட்டம் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் பஞ்சாப்பில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இப்போட்டியில் அரைசதம் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் (36 அரைசதங்கள்) சாதனையை கௌதம் கம்பீர் முறியடிப்பார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் சதம் அடிக்காமல் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் 4,132 ரன்களுடன் கம்பீர் முதலிடத்தில் உள்ளார்.

112 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார். டி20 போட்டிகளில் அவர் கேப்டனாக செயல்படுவது இதுவே முதன்முறையாகும். முன்னதாக, 97 போட்டிகளுக்கு பிறகு அஜிங்க்ய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கருண் நாயர், யுவராஜ் சிங், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஷர் படேல், அஸ்வின் (கேப்டன்), ஆண்ட்ரூ டை, மோஹித் ஷர்மா, முஜீப்-உர்-ரஹ்மான்.

டெல்லி டேர்டெவில்ஸ்:

கௌதம் கம்பீர் (கேப்டன்), காலின் முன்ரோ, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், விஜய் சங்கர், டேனியல் கிறிஸ்டியன், ராகுல் ட்வேட்டியா, அமித் மிஸ்ரா, ட்ரென்ட் போல்ட், முகமது ஷமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com