நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

ஐபிஎல்: முகத்தைத் தாக்கிய பந்து! காயத்துடன் வெளியேறிய இளம் விக்கெட் கீப்பர்! (விடியோ)

வலது கண் அருகே பந்து பட்டதால் இஷான் நிலைகுலைந்து போனார். கீழே விழுந்து துடிதுடித்தார்... 

Published On :30 ஜனவரி 2024, 6:17 pm IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 14-வது ஆட்டம் மும்பைக்கும்-பெங்களூரு அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி ஆடிக்கொண்டிருந்தபோது 13-வது ஓவரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஃபீல்டிங் செய்த பாண்டியா அதை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பக்கம் வீசினார். சரியாகப் பிடிப்பதற்கு முன்பே, அந்த த்ரோ, இஷானின் முகத்தைத் தாக்கியது. வலது கண் அருகே பந்து பட்டதால் இஷான் நிலைகுலைந்து போனார். கீழே விழுந்து துடிதுடித்தார். உடனே மருத்துவக்குழு விரைந்து வந்து ஆடுகளத்திலேயே அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். காயம்பட்ட பகுதியில் உடனடியாகச் சிவந்துபோனது. 

19 வயது இஷான் கிஷன் பிறகு மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக ஆதித்யா தரே செயல்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.