கெயில், ராகுல் மட்டும் விளையாடினால் போதுமா?: மோசமான தோல்வியால் மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ள பஞ்சாப்!

தொடக்க வீரர்களான கெய்ல், ராகுலை அதிகம் நம்பியுள்ளதால் சறுக்கலை எதிர்கொண்டுள்ளது...
கெயில், ராகுல் மட்டும் விளையாடினால் போதுமா?: மோசமான தோல்வியால் மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ள பஞ்சாப்!

ஹைதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் 25-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஹைதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் 25-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20-வது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு வெறும் 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணியில் அங்கித் ராஜ்புத் 5 விக்கெட்டுகளையும், முஜிப்புர் ரஹ்மான் 1 விக்கெட்டையும்
வீழ்த்தினர். ஆனால், பஞ்சாப் அணியால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே பெற முடிந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, பசில் தம்பி, ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் 13 ரன்களில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி இதுவரை 5 வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அந்த அணி தொடக்க வீரர்களான கெய்ல், ராகுலை அதிகம் நம்பியுள்ளதால் சறுக்கலை எதிர்கொண்டுள்ளது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் அந்த அணியால் 155 ரன்கள் எடுக்கமுடிந்தது. இதனால் அந்த இலக்கை 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்குத் தாண்டி வெற்றி பெற்றது பெங்களூர். அதேபோல நேற்றும் ராகுல் 32, கெயில் 23 ரன்கள் எடுத்தும் இதர வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யாததால் இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது பஞ்சாப். கெயில், ராகுலைத் தவிர அந்த அணியில் மற்ற வீரர்கள் யாரும் பொறுப்புடன் விளையாடுவதில்லை. ராகுல் 268 ரன்களும் கெயில் 252 ரன்களும் இதுவரை இந்த வருட ஐபிஎல் போட்டியில் எடுத்துள்ளார்கள். இருவரும் தலா இரு அரை சதங்கள் எடுத்துள்ளார்கள். கெயில் ஒரு சதமும் எடுத்துள்ளார். அடுத்ததாக கருண் நாயர் 7 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 186 ரன்கள் எடுத்துள்ளார். மயங்க் அகர்வால், ஆரோன் ஃபிஞ்ச், யுவ்ராஜ் சிங் போன்ற வீரர்கள் குறைந்தபட்சம் ஆறு ஆட்டங்கள் ஆடியும் அணிக்குப் பெரிய அளவில் உதவாததால் தற்போது புள்ளிகள் பட்டியல் மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளது பஞ்சாப் அணி.

ஐபிஎல் 2018: பஞ்சாப் வீரர்கள் எடுத்த ரன்கள்

ராகுல் - 268 ரன்கள்
கெயில் - 252 ரன்கள்
கருண் நாயர் - 186 ரன்கள்
மயங்க் அகர்வால் - 105 ரன்கள்
அஸ்வின் - 57 ரன்கள்
யுவ்ராஜ் சிங் - 50 ரன்கள்
மில்லர் - 50 ரன்கள்
ஸ்டாய்னிஸ் - 33 ரன்கள்
ஃபிஞ்ச் - 24 ரன்கள்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com