பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தோனியைத் தொடர்ந்து அச்சுறுத்தும் சுனில் நரேன்: நம்பமுடியாத புள்ளிவிவரம்!

57 முறை எதிர்கொண்டு சிக்ஸர் மட்டுமல்ல ஒரு பவுண்டரி கூட தோனி அடிக்கவில்லை என்கிற புள்ளிவிவரத்தை...

News image
Updated On :4 மே 2018, 12:09 pm

எழில்

ஒரு பந்துவீச்சாளரின் பந்துவீச்சை 57 முறை எதிர்கொண்டு சிக்ஸர் மட்டுமல்ல ஒரு பவுண்டரி கூட தோனி அடிக்கவில்லை என்கிற புள்ளிவிவரத்தை உங்களால் நம்பமுடிகிறதா? அதுவும் ஐபிஎல்-லில்!

துல்லியமான சுழற்பந்துவீச்சில் அதிரடியாக விளையாட தோனி அவ்வளவாக முயற்சி செய்யமாட்டார். ஆனால் அது இந்தளவுக்கா என்று ஆச்சர்யப்படவைக்கிறது இந்தப் புள்ளிவிவரம். 

இந்த ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியலில் தோனிதான் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 24 சிக்ஸர்கள். அதேபோல ஐபிஎலில் இதுவரை மொத்தமாக 180 சிக்ஸர்களும் 269 பவுண்டரிகளும் அடித்துள்ளார் தோனி.

ஆனால் ஐபிஎல்-லில் சுனில் நரேன் பந்துவீச்சை 57 முறை எதிர்கொண்டும் இதுவரை தோனி ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை. 

நேற்றைய ஆட்டத்தில் நரேனின் 5 பந்துகளை எதிர்கொண்டார் தோனி. அதில் அவரால் 4 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

ஐபிஎல்-லில் நரேன் வீசிய 57 பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி எதுவும் இன்றி 29 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் தோனி!

ஐபிஎல்-லில் வேறு எந்தவொரு பேட்ஸ்மேனும் இதுபோல ஒரு பந்துவீச்சாளரின் பந்துவீச்சை 50 முறை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியும் அடிக்காமல் இருந்ததில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.