சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

டி20 காட்சிப் போட்டி: சூப்பர்நோவாஸ் அணி அசத்தல் பந்துவீச்சு!

இந்திய மற்றும் அயல்நாட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் டி20 காட்சிப் போட்டி மும்பையில் இன்று தொடங்கியுள்ளது...

News image
Updated On :22 மே 2018, 8:55 am

எழில்

இந்திய மற்றும் அயல்நாட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் டி20 காட்சிப் போட்டி மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டம் தொடங்கவுள்ளது. 

மகளிர் சார்பிலும் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே மகளிர் டி20 போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் காட்சிப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஐபிஎல் டிரைல்பிளேஸர்ஸ் மற்றும் ஐபிஎல் சூப்பர்நோவாஸ் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிரைல்பிளேஸர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர்நோவாஸுக்கு ஹர்மன்பிரீத் கெüரும் கேப்டன்களாக செயல்படுவர். மேலும் முன்னணி வீராங்கனைகளான சூசி பேட்ஸ், அலிஸா ஹீலி, பெத் மூனி, எல்சிபெரி, மேகன் ஷூல்ட்ஸ், டேனியல் வயாட் போன்ற அயல்நாட்டு வீராங்களையும் பங்கேற்கின்றனர்.

டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டிரைல்பிளேஸர்ஸ் அணி 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.