கருமத்தம்பட்டி காங்கிரஸ் நகராட்சி துணைத் தலைவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கந்தசாமி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கருமத்தம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர முடிவெடுத்தனர்.
இந்த நிலையில், இருகூர் பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கந்தசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தற்போதைய திமுக நகராட்சித் தலைவர் நித்யா மனோகரனின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அவர் மீது நீண்ட நாள்களாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் அதிமுகவில் இணைத்துக் கொண்டது கருமத்தம்பட்டி பகுதி காங்கிரஸ் கட்சியினரிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Sensation in Coimbatore... Municipal Congress Vice-Chairman Joins AIADMK!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே

விஜய் முதிர்ச்சியற்ற தலைவர்; திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது! டி.கே. சிவகுமார் பதில்
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

